குவியும் பக்தர்கள்... திணறும் திருப்பதி... 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

Update: 2024-12-29 07:52 GMT

 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. புத்தாண்டு தொடர் விடுமுறை மற்றும் வருட இறுதி என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதன் காரணமாக இலவச தரிசனத்திற்கு சுமார் 24 மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் வருகை அதிகரிப்பு காரணமாக அறைகளுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலை வருகிற 2025 ஜனவரி 2ஆம் தேதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்