இந்தியாவில் டிசம்பர் 31 `நடுங்க' வைக்கும் - வெளியான அதிர்ச்சி தகவல்

Update: 2024-12-29 08:50 GMT

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவுகிறது. டெல்லியில் கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை குறைந்தபட்ச அளவாக 12 டிகிரி செல்சியஸ் பதிவான நிலையில், அடுத்த இரு தினங்களுக்கு பனியின் தாக்கம் கடுமையாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 30ம் தேதி 6 டிகிரியும், 31-ம் தேதி 5 டிகிரி செல்சியசும் பதிவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகரில் குளிரின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் பல்வேறு நகரங்களில் அடர்பனியை குறிக்கும் வகையில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்