குடும்பத்தை தாங்கி நின்ற மூத்த தூண்...பல நண்பர்களை வாழவைத்த தோழன் தீக்கு இரையான சோகம்
குடும்பத்தை தாங்கி நின்ற மூத்த தூண் பல நண்பர்களை வாழவைத்த நண்பன் ஊருக்காக வாழ்ந்த இளைஞனை இரையாக்கிய தீ ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்த ஸ்டெபின் ஆபிரகாம் சாபுவின் இழப்பால் சோகத்தில் மூழ்கியுள்ளது, கேரளாவின் பாம்பாடி கிராமம்.
"போன வேகத்தில் சம்பாதித்து விடலாம்" என்ற பெரும் கனவை சுமந்து கொண்டு வளைகுடா நாடுகளுக்கு பறப்பவர்களே இங்கு அதிகம்.
வெறும் 42 லட்சம் மக்கள் தொகை கொண்ட வளைகுடா நாடான குவைத்தில்... சுமார் ஒன்பதரை லட்சம் இந்தியர்கள் வசிப்பதற்கும் இதுவே முக்கிய காரணம்...
சர்வதேச அளவில் ரூபாய் மதிப்பில் உச்சத்தில் இருக்கும் நாடு குவைத்.... இதனால் தான் இங்கு குறைவான சம்பளம் பெற்றாலும் அது மனதிற்கு நிறைவானதாக அமைகிறது.
ஆனால் குவைத்தில் நடந்த தீ விபத்தால் பல இந்திய குடும்பங்கள் கதறிக் கொண்டிருக்கின்றன.... அதில் ஒரு குடும்பம் தான் கேரளாவில் உள்ள கோட்டையம் பாம்பாடியை சேர்ந்த சாபு - ஷெரில் குடும்பத்தினர்.
தாங்கள் முத்தாக பெற்ற மூன்று மகன்களில் மூத்த மகனான ஸ்டெபின் ஆபிரகாம் சாபுவை நினைத்து அந்த குடும்பம் பூரித்து போகாத நாள் கிடையாது.
எம்டெக் படித்துள்ள ஸ்டெபின் குவைத்துக்கு சென்று ஆறு வருடங்கள் ஆகிவிட்டது... தனது தம்பிகளை படிக்க வைத்து... புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தந்தையின் மருத்துவ செலவையும் கவனித்து கொண்டு... தனக்கென்று சொந்தமாக வீடு ஒன்றையும் கட்டியிருக்கிறார், ஸ்டெபின்.
90 சதவீதம் வீடு கட்டும் பணி நிறைவடைந்து விட்டது... ஆகஸ்ட்டில் ஸ்டெபின் வரும் போது அவருக்கு திருமணம் செய்து வைக்க மறுபுறம் ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தன....
இப்படி 29 வயது வரை குடும்பத்திற்காக ஓடோடி உழைத்து கொண்டிருந்த ஸ்டெபின்... ஆசை ஆசையாய் தனக்கென்ற ஒரு வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்க இருந்த சமயத்தில், தீக்கு அவரது உடல் இரையாகிவிட்டது... சோகத்தின் உச்சம்.
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களுள் ஸ்டெபின் ஆபிரகாம் சாபுவும் ஒருவர்... தாம் வேலை பார்க்கும் நிறுவனத்திலேயே தனது தம்பிக்கும் வேலை வாங்கி கொடுத்திருந்தார் ஸ்டெபின். விபத்து நடந்த கட்டிடத்தில் தான் பத்து நாட்களுக்கு முன்பு வரை ஸ்டெப்பின் உடன் அவரது தம்பி பிலிப்பும் வசித்து வந்துள்ளார்.
இங்கு வசதிகள் குறைவாக இருப்பதால் பிலிப் வேறொரு கட்டிடத்திற்கு மாறி இருக்கிறார். தம்பியுடன் ஸ்டெஃபினும் அந்த கட்டிடத்திற்கு மாற இருந்த நிலையில் இந்த துயரம் அரங்கேறியிருப்பது கொடுமை.
தனது குடும்பத்தை மட்டும் ஸ்டெபின் கை தூக்கி விடவில்லை... தனது நண்பர்கள் பலருக்கும் அவர் நல்ல வேலை வாங்கி கொடுத்திருக்கிறார்... சர்ச்சுக்கும் பல உதவிகளை செய்திருக்கிறார்.
இப்படி கடல் தாண்டி சென்று குடும்பத்தை தாங்கி வந்த பெருந்தூணாக நின்ற ஸ்டெபினை பலி வாங்கிய குவைத் தீ விபத்தால் அவரது குடும்பமே இன்று சரிந்து போய் துடிதுடித்து வருகிறது. அவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியாமல் உறவினர்கள் தவித்து வருகின்றனர்.
இப்படி கடல் தாண்டி சென்று குடும்பத்தை தாங்கி வந்த பெருந்தூணாக நின்ற ஸ்டெபினை பலி வாங்கிய குவைத் தீ விபத்தால் அவரது குடும்பமே இன்று சரிந்து போய் துடிதுடித்து வருகிறது. அவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியாமல் உறவினர்கள் தவித்து வருகின்றனர்.