பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற குகேஷ்

Update: 2024-12-29 02:07 GMT

உலக செஸ் சாம்பியனான தமிழக வீரர் குகேஷ், தனது பெற்றோருடன் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். சந்திப்பின்போது குகேஷை பிரதமர் மோடி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, செஸ் சாம்பியனும் இந்தியாவின் பெருமையுமான குகேஷ் உடன்,, சிறப்பான கலந்துரையாடலை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். குகேஷின் அர்ப்பணிப்பும் மன உறுதியும்தான் தன்னை பெரிதும் கவர்ந்ததாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, அவரது நம்பிக்கை ஊக்கமளிக்கும் வகையில் உள்ளதாக கூறியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு இளம் வயதில் உலக சாம்பியனாவார் என்று குகேஷ் கூறிய வீடியோவைப் பார்த்தது தனக்கு நினைவிருப்பதாகவும், அவரது முயற்சியினால் அந்த கணிப்பு தற்போது உண்மையாகிவிட்டதாகவும் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்