கணவரின் வெறிச்செயலால் ரத்த வெள்ளத்தில் மிதந்த பெண் போலீஸ் - கேரளவில் அதிர்ச்சி

Update: 2024-11-22 03:07 GMT

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்திற்கு உட்பட்ட சந்தேரா காவல் நிலைய சிவில் காவல் அலுவலராக பணிபுரிந்து வந்தவர் திவ்யஸ்ரீ. இவருக்கும் கணவர் ராஜேஷுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததால், கரிவள்ளூரில் உள்ள தாயாரின் வீட்டில் திவ்யஸ்ரீயை வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் அவரது வீட்டிற்கு வந்த அவரது கணவர் ராஜேஷ், திவ்யஸ்ரீயை கத்தியால் குத்தியுள்ளார். அதை தடுக்க முயன்ற திவ்யஸ்ரீயின் தந்தை வாசுவையும் ராஜேஷ் வெட்டியுள்ளார். இந்த சம்பவத்தில் கழுத்திலும் மூக்கிலும் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த திவ்யஸ்ரீயை மீட்ட குடும்பத்தினர்,பையங்காடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் திவ்யஸ்ரீ வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறினர். படுகாயமடைந்த திவ்யஸ்ரீயின் தந்தை வாசு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மனைவியை கொன்றுவிட்டு தலைமறைவான ராஜேஷை கண்ணூர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்