பத்தனம்திட்டா பந்தளம் சேரிகல்லில் இருந்து அடூர் தீயணைப்பு துறையினருக்கு வந்த அழைப்பில் வீட்டில் வளர்த்து வந்த பூனைக்குட்டியின் தலை கேஸ் அடுப்பின் துவாரத்தில் மாற்றிக் கொண்டதாக தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்ட விசாரணையில் கேஸ் அடுப்பிற்குள் விழுந்த சிறிய மீன் துண்டை எடுப்பதற்காக சென்ற போது பூனைக்குட்டியின் தலை துவாரத்தில் மாட்டிக் கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து கேஸ் அடுப்பை உடைத்து பத்து நிமிட போராட்டத்திற்கு பின் பூனைக்குட்டி பத்திரமாக காப்பாற்றப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.