கர்நாடகாவின் ராம் நகர் மாவட்டத்தில் உள்ள சென்னப்பட்னா பகுதியில் காட்டு யானை ஒன்று மரத்துண்டை வைத்து விளையாடிய காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சென்னபட்னாவின் காட்டுப் பகுதியில் தேங்கியிருந்த நீரில் விளையாடிய காட்டி யானை ஒன்று ஒரு மரத்துண்டை தனது தும்பிக்கையால் எடுத்து சுழற்ற முயன்றது. யானையின் இந்த செயலை பார்க்கும்போது சிலம்பம் பயிற்சி மேற்கொள்வது போல இருந்ததாகவும், மனிதர்களிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள யானை சிலம்பம் கற்க முயல்வதாகவும் சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டுள்ளனர்.