கதறிய கங்காரு பாய்ஸ் - கபில்தேவின் சாதனையை சுக்கு நூறாய் உடைத்த பும்ரா

Update: 2024-12-16 02:54 GMT

இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா டெஸ்ட் போட்டிகளில், முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில்தேவின் சாதனையை முறியடித்துள்ளார். பிரிஸ்பேனில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் பும்ரா 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். பும்ரா டெஸ்ட் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 12-வது முறையாகும். அதேசமயம் ஆசிய கண்டத்திற்கு வெளியே பத்தாவது முறையாக டெஸ்ட் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் ஆசியாவுக்கு வெளியே டெஸ்ட் இன்னிங்சில் 9 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய கபில்தேவின் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்