இந்தோனேசியாவின் 79-வது சுதந்திர தினம், தலைநகர் நுசன்தாராவில் கொண்டாடப்பட்டது. ஆகஸ்ட் 17-ம் தேதி இந்தோனேசியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அந்நாட்டின் புதிய தலைநகர் நுசன்தாராவில் முதன்முறையாக சுதந்திர தினவிழா கலை கட்டியது. இந்த விழாவில் அதிபர், ஜோகோ விடோடோ உள்ளிட்டோர் கலந்து அந்நாட்டு தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்தினர். இதையடுத்து விழாவில் நடைபெற்ற அந்நாட்டின் பாரம்பரிய பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.