ஒரே நாளில் 9 இடங்கள்.. தேர்தலுக்கு முன் அதிரடி காட்டும் IT

Update: 2024-11-09 13:33 GMT

ஜார்க்ண்ட் முதல்வர் ஹேமந்த் சோரேனின் தனி உதவியாளர் சுனில் ஸ்ரீவாஸ்தவ் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையிட்டனர். தலைநகர் ராஞ்சி, ஜம்ஷெட்பூர் ஆகிய மாநகரங்களில் 9 இடங்களில் இச்சோதனை நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இரு கட்டங்களாக நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற சில நாள்களே உள்ள நிலையில் வருமான வரித்துறையினரின் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பணமோசடி வழக்கில் கடந்த ஜனவரில் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரேனுக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் ஜாமீன் வழங்கியதும், பின்னர் மீண்டும் அவர் முதல்வரானதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்