உத்தர பிரதேசத்தில் தன்னை வளர்த்த உரிமையாளரை வளர்ப்பு நாய் தாக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த மொஹானி தேவி என்கிற 80 வயது மூதாட்டி, ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாயை வளர்த்து வந்தார். இந்நிலையில், வீட்டில் இருந்த மொஹானி தேவியை அந்த நாய் வயிறு, இடுப்பு உள்ளிட்ட இடங்களில் கடித்து குதறியுள்ளது. சத்தம் கேட்டு உறவினர்கள் வந்து பார்த்தபோது, மொஹானி தேவி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனை அடுத்து அந்த நாயை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்துச்சென்றனர்.