5 ஆண்டுகளில் ரூ. 300 கோடி...தலைநகரில் வலம் வந்த 6 பேர்... விசாரணையில் வெளிவந்த உண்மை

Update: 2024-09-16 02:30 GMT

டெல்லியில் 5 ஆயிரம் போலி விசாக்களை தயாரித்து கொடுத்து, 300 கோடி ரூபாய் வசூலித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.ஹரியானாவைச் சேர்ந்த சந்தீப் என்பவர் போலி விசாவில் இத்தாலி செல்ல முயன்ற போது, டெல்லி விமான நிலையத்தில் பிடிபட்டார். அவரிடம் விசாரித்தபோது, டெல்லியில் ஒரு கும்பல் 10 லட்ச ரூபாயை பெற்றுக் கொண்டு போலி விசா தயாரித்துக் கொடுத்ததாக கூறினார்.இதையடுத்து, போலி விசா தயாரித்துக் கொடுத்த ஆசிப் அலி மற்றும் அவரது கூட்டாளிகளான சிவ கவுதம், நவீன் ராணா, இவர்களுடன் தொடர்பில் இருந்த பல்பீர் சிங், ஜஸ்விந்தர் சிங், மனோஜ் மோங்கோ ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.கடந்த 5 ஆண்டுகளாக 5 ஆயிரம் போலி விசாக்களை தயாரித்துக் கொடுத்து, அதன் மூலம் 300 கோடி ரூபாயை அந்த கும்பல் ஈட்டியது விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து பல நாடுகளின் போலி பாஸ்போர்ட்டுகள், விசா முத்திரைகள், அச்சு இயந்திரங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்