அதிஷி பற்றி கெஜ்ரிவால் விட்ட வார்த்தை... வரிந்து கட்டி வந்த ஆளுநர் - பரபரப்பில் டெல்லி

Update: 2024-12-31 05:28 GMT

டெல்லி முதல்வர் அதிஷியை தற்காலிக முதல்வர் என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஜனநாயக விழுமியங்களை சிதைத்தது விட்டதாக டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா விமர்சனம் செய்துள்ளார். டெல்லி முதல்வர் அதிஷிக்கு கடிதம் எழுதியுள்ள வி.கே. சக்சேனா, தங்களை கெஜ்ரிவால் தற்காலிக முதல்வர் என்று அழைத்தது ஆட்சேபனைக்குரியது, தன்னை மிகவும் காயமடைய செய்துவிட்டது என குறிப்பிட்டுள்ளார். தற்காலிக முதல்வர் என்று அரசியலமைப்பில் எந்த பதவியும் இல்லை எனக் கூறியிருக்கும் சக்சேனா, கெஜ்ரிவால் அப்படி அழைத்தது தங்களுக்கு மட்டும் அவமதிப்பு இல்லை, உங்களை நியமித்த குடியரசு தலைவர் மற்றும் தனக்கும் அவமதிப்பு என குறிப்பிட்டுள்ளார். கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது கோப்புகளில் கையெழுத்துகூட போட்டது இல்லை என விமர்சனம் செய்திருக்கும் வி.கே. சக்சேனா, கெஜ்ரிவால் போல் அல்லாமல் டெல்லி அமைச்சரவையில் அதிக பொறுப்புகளை வகித்துக் கொண்டு முதல்வராக சிறப்பாக செயல்படுவதாக அதிஷியை பாராட்டியிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்