மிகவும் மோசமான நிலையில் தலைநகர்...திணறும் மக்கள் - நள்ளிரவிலும் நடக்கும் பணிகள்

Update: 2024-11-19 03:47 GMT

காற்று மாசு அதிகரித்துள்ளதால், டெல்லி மற்றும் அரியானா மாநில பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருவதால், நான்காம் நிலை கட்டுப்பாடுகளும் அமலுக்கு வந்தன. இதனால், 10 மற்றும் 12ஆம் வகுப்பு நீங்களாக, மற்ற வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், உச்சநீதிமன்ற அறிவுரையை அடுத்து, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் அதிஷி, ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்படும் என கூறியுள்ளார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும், 22ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, அரியானா மாநிலத்திலும், 23ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிக்கூடங்களிலும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்