சாக்லெட்டை ஆசையாக கடித்த நொடி..கொத்தாக வந்து விழுந்த 4 பற்கள்..பேரதிர்ச்சி கொடுத்த பர்த்டே பார்ட்டி

Update: 2024-07-25 07:46 GMT

சாக்லெட்டை ஆசையாக கடித்த நொடியே

கொத்தாக வந்து விழுந்த நான்கு பற்கள்

பேரதிர்ச்சி கொடுத்த பர்த்டே பார்ட்டி

சாக்லெட் பிரியர்களா நீங்கள்?...அப்போது கொஞ்சம் உஷாராகத் தான் இருக்க வேண்டும்...ஆம்...மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு பெண் வாங்கிய சாக்லெட்டில் பற்கள் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... இந்த சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

சாம்பாரில் கரப்பான் பூச்சி...ரசத்தில் புழு...ஐஸ்கிரீமில் மனித விரல்...சாக்லெட் சிரப் பாட்டிலில் எலி வரிசையில் இணைந்துள்ளது சாக்லெட்டில் பல்...

சிகரெட் பாக்கெட்டுகளில் புற்றுநோய் எச்சரிக்கைக்காக அச்சுறுத்தும் வகையில் படத்துன் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதியிருப்பார்கள்...

அந்த வகையில் சாக்லெட் அதிகம் சாப்பிட்டால் பல் சொத்தை வரும் என்பதை எச்சரிப்பதைப் போல் அமைந்துள்ளது சாக்லெட்டிற்குள் பற்கள் கிடந்த சம்பவம்...

மத்திய பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியை மாயாதேவி குப்தா...தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து பொது சேவை செய்து வருகிறார்...

ஒரு குழந்தையின் பிறந்த நாள் விழாவுக்காக சென்றிருந்த போது வழங்கப்பட்ட பிரபல நிறுவனம் ஒன்றின் சாக்லெட்டை ஆசை ஆசையாய் பிரித்து வாயில் வைத்துளார் மாயாதேவி...

ஏதோ வாயில் கரடுமுரடாக தென்படவே...என்னவாயிருக்கும் என எடுத்துப் பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது... ஆம்...வாயில் தட்டுப்பட்டது பற்கள் என்பதையறிந்து அதிர்ச்சி அடைந்தார் மாயாதேவி...

முதலில் அது தனது பல் தானோ என சந்தேகித்த மாயாதேவி...பிறகு அது தன்னுடையது இல்லை என்பதை உறுதி செய்துள்ளார்...பிறகு நன்றாக ஆய்வு செய்த போது தான் அவை போலியான பற்கள் என தெரிய வந்தது...

உடனடியாக மாவட்ட உணவு மற்றும் மருந்து துறைக்கு அவர் புகார் அளித்தார்...இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது...

போகும் போக்கைப் பார்த்தால் கடையில் எதையுமே நம்பி வாங்கி சாப்பிட முடியாத நிலை வந்து விடுமோ என அச்சம் கொள்ள வைக்கின்றன இதுபோன்ற தொடர் சம்பவங்கள்...

Tags:    

மேலும் செய்திகள்