இந்தியாவில் மட்டும் ரூ.1052 கோடி வசூலித்து பாகுபலி 2 சாதனையை முறியடித்த புஷ்பா 2...!
நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி பதினெட்டே நாள்களில் உலகளவில் ஆயிரத்து 500 கோடி வசூலைத் தாண்டி வெற்றிநடை போட்டு வருகிறது... இந்தியாவில் மட்டும் ஆயிரத்து 52 கோடி வசூலித்து பாகுபலி 2வின் சாதனையை முறியடித்துள்ளது... அத்துடன் இதற்கு முன்பு இருந்த பல சாதனைகளையும் இப்படம் தகர்த்துள்ளது. 18 நாள்களைக் கடந்தும் புஷ்பா 2 திரைப்படத்தைக் காண திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது.