பெண்களுக்கு மாதம் ரூ.2,100 வழங்கும் திட்டம்..!தொடங்கி வைத்த அரவிந்த் கெஜ்ரிவால் | Arvind Kejriwal
பெண்களுக்கு மாதம், 2 ஆயிரத்து 100 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்ப பதிவை முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார். டெல்லி சட்டப்பேரவைக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, பெண்களுக்கு மாதந்தோறும் டெல்லி அரசின் சார்பில், 2 ஆயிரத்து 100 ரூபாய்
வழங்கப்படும் என, அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வாரம் அறிவித்தார். தேர்தலுக்குப் பின் இத்தொகை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புது டெல்லி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கிட்வாய் நகர் பகுதியில், விண்ணப்ப பதிவினை, டெல்லி முதல்வர் அதிஷியுடன் இணைந்து அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார். அப்போது, பெண்களின் சில விண்ணப்பங்களை அரவிந்த் கெஜ்ரிவால் தனது கைப்பட நிரப்பி பதிவு செய்தார்.