வயநாடு குறித்து அதிர்ச்சி செய்தி "அது பொய் யாரும் நம்பாதீங்க.." - களத்தில் நின்று பதறும் தமிழர்கள்

Update: 2024-08-05 09:46 GMT

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண பொருள்கள் கிடைத்து விட்டது என வதந்திகள் பரவும் நிலையில், அதை யாரும் நம்ப வேண்டாம் என பதறியபடி கூறுகின்றனர் களத்தில் நிற்கும் நம் தமிழ் சொந்தங்கள்...எதனால்?...பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...

தர்மம் தலைகாக்கும் என்பதை நன்குணர்ந்தவர்கள் தமிழ் மக்கள்...

தனக்கில்லா விட்டாலும் கடன் வாங்கியாவது உதவி செய்யுமளவு இலகிய மனம் கொண்டவர்கள்...

வீரமும் பாசமும் நிறைந்த தமிழ் மண்ணில் இருந்து நிலச்சரிவால் நிலைகுலைந்து போன நம் அண்டை மாநிலமான கேரளாவின் வயநாட்டிற்கு வண்டி வண்டியாக உதவிகள் சென்று கொண்டிருக்கின்றன...

கேரள மாநிலம் வயநாடு கல்பெட்டா பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியை முகாமாக்கி அங்குதான் நிவாரண பொருள்கள் அனைத்தும் சேகரிக்கப்படுகின்றன...

இங்கிருந்து தான் நிவாரண பொருள்கள் தரம் பிரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் தங்கி இருக்கும் 82 முகாம்களுக்கும் பிரித்து அனுப்பப் படுகின்றன...

"காலம் தாழ்த்திச் செய்யும் உதவி உதவியன்று" என்பதை உணர்ந்தவர்கள் தமிழர்கள் என்பதால் தான் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வளவு விரைவாக உதவிகள் சென்று சேர முடியுமோ அவ்வளவு விரைவாக நம் தமிழ் சொந்தங்கள் கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர்...

இதுவல்லவா தமிழ் மரபு...யாவரும் கேளிர் என்றுதானே நாம் வளர்க்கப் பட்டிருக்கிறோம்... அதே சமயம், வயநாட்டிற்குத் தேவையான உதவிகள் கிடைத்து விட்டதாகவும்...இனிமேல் யாரும் உதவ வேண்டாம் எனவும் சில விஷமிகள் கருத்து பரப்பி வரும் நிலையில், அதை யாரும் நம்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கின்றனர் பொள்ளாச்சியைச் சேர்ந்த தன்னார்வலர்கள்... வந்தாரை வாழ வைக்கும் சென்னை வயநாட்டைக் கைவிட்டு விடுமா என்ன?... இதோ கோயம்பேடு காய்கறி சந்தையில் இருந்து டன் கணக்கில் காய்கறிகள் பாதிக்கப்பட்ட மக்களின் பசியாற்ற கொண்டு செல்லப்பட்டுள்ளன...உதவி என்பதை உதவி பெறுவோர் எண்ணிவிடக்கூடாது என்பதை நன்குணர்ந்து உதவி செய்வதைக் கடமையாய் நினைத்து பணியாற்றும் தமிழ் தன்னார்வலர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன...

Tags:    

மேலும் செய்திகள்