கங்கையில் நீராட குவிந்த மக்கள்... சுமார் 3 மணி நேரம் திக்கி திணறும் நெடுஞ்சாலை | Bihar | Ganga River

Update: 2024-11-15 14:32 GMT

இன்று கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள கங்கா காட் பகுதியில், கங்கையில் நீராட மக்கள் குவிந்தனர். கூட்ட நெரிசலால் நிர்வாகம் செய்த ஏற்பாடுகள் சீர் குலைந்தது. திகா முதல் பாட்னா வரை அனைத்து இடங்களிலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 3 மணி நேரமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் தவிக்கின்றனர். சாலையில் மற்றும் மேம்பாலங்களில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் நிற்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்