காவிரி வழக்கு - செப்.1க்குள் அறிக்கை அளிக்க உத்தரவு
காவிரி நதி நீர் வழக்கு - காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செப்., 1ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசின் மனு மீதான விசாரணை செப்.1ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
காவிரியிலிருந்து உரிய நீரை திறந்தவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரும் தமிழ்நாடு அரசின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் செப்டம்பர் 1-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.
காவிரியிலிருந்து உரிய நீரை திறந்தவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரும் தமிழ்நாடு அரசின் மனு - உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்
கர்நாடக மாநிலத்தில் நடப்பாண்டு வறட்சி நிலவுகிறது - கர்நாடக அரசு வாதம்
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும் - தமிழ்நாடு அரசு
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தையே ஏன் நாடக்கூடாது? இந்த விவகாரத்தில் நாங்கள் நிபுணர்கள் இல்லையே - உச்சநீதிமன்ற நீதிபதிகள்
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு அமல்படுத்தவில்லை - தமிழ்நாடு அரசு
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை அமல்படுத்தி வருகிறோம் - கர்நாடக அரசு
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகள் அமல்படுத்திருப்பதை எப்படி அறிந்து கொள்ள முடியும்? - உச்சநீதிமன்றம் கேள்வி
தற்போதைய சூழல் குறித்து ஆகஸ்ட் 28-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் - தமிழ்நாடு அரசு
கர்நாடகத்தில் வறட்சி நிலவுவது உண்மைதான் -காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தகவல்