காவு வாங்கிய புஷ்பா- 2 - உயிருக்கு போராடும் சிறுவனை நேரில் சென்று பார்த்த அல்லு அர்ஜுனின் தந்தை..
புஷ்பா 2 படத்தின் சிறப்புக் காட்சியின் போது காயமடைந்த சிறுவனை, அல்லு அரவிந்த் நேரில் சென்று பார்த்தார். புஷ்பா-2 திரையிடலின்போது சந்தியா திரையரங்கலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சிறுவனின் உடல்நிலை குறித்து அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் கேட்டறிந்தார். பின்பு பேசிய அவர், சிறுவனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், கட்டுப்பாடுகள் காரணமாக சிறுவனை பார்க்க முடியவில்லை என தெரிவித்தார்.