அம்பேத்கர் என்று சொல்வது இப்போது பேஷன் ஆகிவிட்டது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளதற்கு, ஆதவ் அர்ஜுனா கண்டனம் தெரிவித்துள்ளார். அம்பேத்கர் கொண்டு வந்த அரசியலமைப்பு சட்டம் தான் பிரதமர், உள்துறை அமைச்சர் உட்பட பல ஏழைத்தாயின் மகன்களும் அரசியல் அதிகாரத்தை அடையக் காரணம் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதுவே இன்று அனைவரும் பரவலாக அரசியல் உரிமைகளை பெற வழி வகுத்தது என்று குறிப்பிட்டுள்ளார்.