பெண்கள் பெட்டியில் உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் உள்ளே வந்த நபர்..அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..

Update: 2024-12-18 09:31 GMT

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், பெண்களுக்கான ரயில் பெட்டியில் நிர்வாணமாக நுழைந்த நபரால் பரபரப்பு நிலவியது. சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையத்திலிருந்து, கல்யாண் பகுதியை நோக்கி ஏசி வசதி கொண்ட உள்ளூர் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, பெண்களுக்கான பெட்டியில் திடீரென ஒரு நபர் நிர்வாணமாக நுழைந்ததால் பெண்கள் கத்தி கூச்சலிட்டனர். பெட்டியைவிட்டு கீழே இறங்குமாறு பெண்கள் அறிவுறுத்தியும் அந்த நபர் இறங்காத நிலையில், டிக்கெட் பரிசோதகர் வரவழைக்கப்பட்டு, பின்னர் கீழே இறக்கிவிடப்பட்டார். இதனிடையே, அந்த நபர் மனநலம் சரியில்லாததால் தவறுதலாக மகளிர் பெட்டியில் ஏறியதாகவும், அவருக்கு உடைகள் அணிவிக்ப்பட்டு பின்னர் ரயில் நிலையத்தைவிட்டு வெளியே கொண்டு விட்டதாகவும், ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்