சினிமா 2024 - பட்டைய கிளப்பிய படங்கள் முதல் பல்ப் வாங்கிய படங்கள் வரை

Update: 2024-12-28 17:25 GMT

2024ல் பட்டைய கிளப்பிய படங்கள் தொடங்கி வந்த தடமே தெரியாம போன படங்கள் என்னென்ன?பார்க்கலாம் வாங்க..

கொண்டாட வைத்த கொட்டுக்காளி, கண்ணீர் வர வைத்த வாழை

விருதுகள் அறிவிப்புக்கு பிறகு தான் கொட்டுக்காளி என்ற படமே தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வந்த இந்த படம் விருதுக்கான படம் தானே தவிர, சொல்லும் அளவுக்கு ஒன்றுமில்லை என கடந்து போயினர் இணையவாசிகள் பலர்.. அதே வரிசையில் தான் வாழை.. நிஜத்தில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படம், க்ளைமேக்ஸ் காட்சியில் பலரையும் கண்ணீர் விட வைத்தது..

2024ல் டாப் கியரில் சென்ற மலையாள திரையுலகம்

மலையாள சினிமாவுக்கு இந்த வருஷம் ஒரே கொண்டாட்டம் தான்... காரணம் மஞ்சும்மல் பாய்ஸ், ஆவேஷம், பிரம்மயுகம், குருவாயூர் அம்பல நடையில், ஆடு ஜீவிதம் என அடுத்தடுத்து அதிரி புதிரி ஹிட்..

ஒரு பக்கம் விருதுகளும், மறுபக்கம் குணா படத்தோட பாட்டும் ஹிட் அடிக்க மலையாள சினிமாவுக்கு தமிழ் இன்டஸ்ட்ரியில ஒரே மவுசு தான்..


வரவேற்பை பெறாத பான் இந்தியா படங்கள்

பெரிய பட்ஜெட், மிகப்பெரிய நடிகர்கள் என பெரும் எதிர்பார்ப்போட வந்த பான் இந்தியா படங்களுக்கு இந்த வருஷம் போதிய வரவேற்பில்லை... உதாரணத்துக்கு கல்கி, தேவாரா படங்களை மக்கள் கண்டுக்கவே இல்லை...

சைலண்ட் ஆக சம்பவம் செய்து வைத்த தரமான படங்கள்

சின்ன பட்ஜெட் தான்.. ஆனா விமர்சன ரீதியாக மக்களிடம் சென்று சேர்ந்த படங்கள் இந்த ஆண்டு அதிகம்... அதில் லப்பர் பந்து, லக்கி பாஸ்கர், மெய்யழகன், போகுமிடம் வெகு தூரமில்லை, மகாராஜா என வரிசை கட்டி வந்த படங்கள் இந்த ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களை ஆசுவாசப்படுத்தியது...


இணையத்தையே தகிக்க வைத்த இந்தியன் 2 விமர்சனம்

ஷங்கர் டைரக்‌ஷன், கமல் ஆக்டிங் என பெரும் ஹைப் உடன் வந்த ஒரு படத்தை இணையத்தில் சிதறு தேங்காய் போல தெறிக்க விட்டனர் இணையவாசிகள்... ஒரு படத்தை இப்படியா க்ரிஞ்ச் போல எடுத்து வைப்பீங்க..? என படம் பார்த்தவர்கள் கொந்தளிக்க, அடுத்து வரும் இந்தியன் 3 ஓடிடியில் இல்லை.. தியேட்டரில் தான் என மீண்டும் ஷாக் அப்டேட் தந்தார் ஷங்கர்...


கங்குவா.. கலங்கி நின்ற சூர்யா... ஜோதிகா...

சிறுத்தை சிவா, ஞானவேல் ராஜா தான் இந்த ஆண்டின் மீம் டெம்ப்ளேட்டின் உச்சபட்ச கன்டென்ட். காரணம் தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் எடுத்து வைத்த கங்குவா படம் தான்... வரலாற்று கதை என சொன்னாலும் கூட படத்தின் கதை, கலெக்‌ஷனை தாண்டி டெசிபலில் வந்து நின்றது பிரச்சினை.. இனிமேல் யூட்யூபர்களை தியேட்டருக்குள் ரிவ்யூ எடுக்க விடவே கூடாது என வந்து நின்றது கங்குவா பட கன்னா பின்னா விமர்சனத்தால் தான்.

வேட்டையன், தி கோட் - ஹிட்டா? சொல்லவே இல்லை..!

இந்த ஆண்டு ரஜினிக்கு வேட்டையன், விஜய்க்கு தி கோட் படங்கள் கணக்காய் வந்து சிக்கியது. அரசியல் பிரவேசத்திற்கு முன்பாக இதுதான் கடைசி படம் என தி கோட் படத்தை விஜய் சொல்ல, வெங்கட்பிரபு டைரக்‌ஷன், டீ ஏஜிங் டெக்னாலஜி என வந்த படம் வசூலில் ஆஹா தான்.. ஆனால் வேட்டையனையும், தி கோட் படத்தையும் லெப்ட் ஹேண்டில் டீல் செய்தனர் இணையவாசிகள்..

முகுந்தனாக சிவகார்த்திகேயன், இந்துவாக சாய் பல்லவி...

மேஜர் முகுந்த் வரதராஜன் இப்படி தான் இருந்திருப்பார் என அமரன் படத்தில் கண்முன்னே கொண்டு வந்திருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். மம்மூட்டி, மம்மூட்டி என சாய் பல்லவியை அவர் அழைக்கும் போதெல்லாம் இப்படி ஒரு லவ்வா? என ஒரே நெகிழ்ச்சி தான்... சாய் பல்லவிக்கு பென்ச் மார்க் படமாக அமரன் அமைந்து விட, சக்கரே.. சக்கரே.. என சாய் பல்லவியின் சிரிப்பில் கரைந்து போயினர் ரசிகர்கள்..


வருட இறுதியில் விடுதலை பார்ட் 2, முஃபாசா தி லயன் கிங்

2024ன் இறுதியில் பெரும் எதிர்பார்ப்போடு வெளியானது விடுதலை பார்ட் 2 மற்றும் முஃபாசா தி லயன் கிங் படம்.. விடுமுறை நாளை டார்கெட் செய்து வெளியான தி லயன் கிங் படத்திற்கு அர்ஜுன் தாஸ், அசோக்செல்வன், நாசர் என பின்னணி குரல் கொடுக்க, சூரி, மஞ்சு வாரியர் விஜய் சேதுபதி காம்போவில் ரசிகர்களை கவர்ந்தது இந்த 2 படங்களும்...

Tags:    

மேலும் செய்திகள்