தனது ஹார்ட் டிஸ்கை ஒருவர் எடுத்து வைத்து கொண்டு தர மறுப்பதாக கூறி சென்னையில் உள்ள பெப்சி அலுவலகம் முன் நடிகை சோனா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் ஸ்மோக் என்ற தனது பயோபிக் இணைய தொடரை வெளியிட முடியாமல் தவிப்பதாகவும்,
தங்களிடம் மேலாளராக வேலை பார்த்த ஷங்கர் என்பவர் 8 லட்சம் ரூபாயை பெற்று கொண்டு மோசடியில் ஈடுபட்டதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.