ராஷ்மிகாவுடன் வயது வித்தியாசம் - ``உங்களுக்கு என்ன பிரச்சனை?''

Update: 2025-03-24 08:53 GMT

நடிகை ராஷ்மிகா உடனான வயது வித்தியாசம் குறித்த கேள்விக்கு நடிகர் சல்மான் கான் பதிலடி கொடுத்தார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், பாலிவுட் நடிகர் சல்மான் கான், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் திரைப்படம், வருகிற 30ம் தேதி வெளியாகிறது. இதுகுறித்த ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர் ஒருவர், ராஷ்மிகா உடனான வயது வித்தியாசம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சல்மான் கான், தனக்கும், ஹீரோயினுக்கும் 31 வயது வித்தியாசம் இருப்பதாக பேசுகிறார்கள்... இதில் ஹீரோயினுக்கோ, அவரது தந்தைக்கோ பிரச்சனை இல்லாதபோது, உங்களுக்கு என்ன பிரச்சனை? என்று கேள்வி எழுப்பினார். மேலும், ராஷ்மிகாவுக்கு திருமணமாகி மகள் பிறந்தால், அவரது அனுமதியுடன், மகளுடனும் சேர்ந்து நடிப்பேன் என்றும் சல்மான் கான் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்