நயன்தாராவின் “டியர் ஸ்டூடண்ட்ஸ்“ படப்பிடிப்பு நிறைவு

x

நிவின் பாலி , நயன்தாரா நடித்துள்ள டியர் ஸ்டூடண்ட்ஸ் (DEAR STUDENTS)படத்தின் படப்பிடிப்பு நிறைவுடைந்துள்ளது.

நடிகை நயன்தாரா கடந்த 2019 ஆம் ஆண்டு தியான் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நடித்த லவ் ஆக்ஷன் டிராமா படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.அதைத் தொடர்ந்து தற்போது நயன்தாரா மீண்டும் நிவின் பாலியுடன் இணைந்து 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் பிலிப் இயக்கியுள்ள இந்த படத்தை பாலி ஜூனியர் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்