கே.எஸ்.ரவிக்குமாரின் தாய் திடீர் மரணம்..ஓடோடி வந்த திரை பிரபலங்கள் | K.S.Ravikumar

Update: 2024-12-05 12:34 GMT

இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் தாயார் ருக்மணி அம்மாள் நேற்று மாலை உயிரிழந்த நிலையில் சென்னை சின்னமலையில் உள்ள இல்லத்தில் அவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கே எஸ் ரவிக்குமாருடன் பணியாற்றிய உதவி இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் தங்கள் இரங்கலை நேரடியாகவும் தொலைபேசிலும் தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் இருப்பதால் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கலை தெரிவித்துள்ளார். நடிகர்கள் மீனா, சத்யராஜ், ராமராஜன், ரமேஷ் கண்ணா, கவுண்டமணி, ஸ்டண்ட் மாஸ்டர் பெப்சி விஜயன், இயக்குனர் விக்ரமன் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்