"தர்மம் தலை காக்கும்" - விஜயகாந்த் விஷயத்தில் நிஜமானது..! அப்பாவால் மகனை தேடி வந்த சர்ப்ரைஸ்
விஜயகாந்தின் மகன் நடிக்கும் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க விரும்புவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு தனது தாயாருடன் சென்று மரியாதை செலுத்தினார். அப்போது, விஜயகாந்தின் மகனும், நடிகருமான சண்முக பாண்டியனுக்கு சினிமாவில் பக்கபலமாக இருக்குமாறு தன்னிடம் அவரது உறவினர்கள் கூறியதாக நினைவுகூர்ந்த லாரன்ஸ், இனிவரும் காலங்களில் சண்முகபாண்டியனுடன் இணைந்து நடிக்க விரும்புவதாக குறிப்பிட்டார்.