இவர்கள் எல்லாம் எந்த மாதிரியான மனிதர்கள்?

Update: 2024-12-21 18:15 GMT

தெலங்கானா சட்டசபையில் அல்லு அர்ஜுன் விவகாரம் குறித்து பேசினார். அப்போது,

பத்து திரையரங்குகள் இருக்கும் இடத்தில் நடிகர் வந்தால் கூட்டத்தை சமாளிக்க முடியாது என காவல்துறை தெரிவித்ததையும் மீறி,

புஷ்பா 2 படத்தின் கதாநாயகன் வந்து, தனது காரின் ரூஃப் வழியாக ஷோ காட்டியதாக கூறியுள்ளார்.

அவரைப் பார்த்ததும் அந்த இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதாகவும்,

கூட்டத்தை சமாளிக்க முடியாததால் திரையரங்கத்தை விட்டு செல்லுமாறு காவல் உதவி ஆணையர் கூறிய போதும்,

படத்தை பார்த்துவிட்டுதான் செல்வேன் என அல்லு அர்ஜூன் தெரிவித்தாக கூறியுள்ளார்.

பின்னர் டிஜிபி வந்து கைது செய்வோம் என்று கூறிய பின்னதான் வெளியேறியதாகவும்,

வண்டியில் உட்கார்ந்த பின்னும், அல்லு அர்ஜுன்

தனது காரில் இருந்து, கை காட்டியதாவும் முதலமைச்சர் ரேவந்தரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.

இவர்கள் எல்லாம் எந்த மாதிரியான ஒரு மனிதர்கள்? என்றும், இவர்களைப் பற்றி நான் எதுவும் சொல்லக் கூடாதா? என கேள்வி எழுப்பினார்.

யாரோ சிலரின் பேச்சைக் கேட்டு அல்லு அர்ஜுனை கைது செய்ததாக சிலர் தகவல் பரப்புகிறார்கள் என்று கூறியுள்ளார்.

நீங்கள் சொந்தமாக தொழில் பண்ணுங்கள், பணம் சம்பாதியுங்கள், அரசிடம் மானியம் கேளுங்கள், மற்ற எல்லா சலுகையும் கேட்கலாம்,

ஆனால் இரண்டு உயிர்கள் பறிபோன பின், அரசிடம் சலுகை கேட்காதீர்கள் என்று தெரிவித்தார்.

நான் முதலமைச்சர் இருக்கையில் இருக்கும் வரை உங்களுக்கு எந்த சலுகையும் கிடைக்காது என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி காட்டமாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்