``வந்த பயங்கர சத்தம்.. ஆபத்தாக மாறி விடுமோ?'' - காதுகளை மூடி ஓடிய நடிகர் அஜித்

Update: 2025-01-13 06:11 GMT

துபார் கார் பந்தயத்தில் வென்ற அஜித் சக வீரர்களுடன் நடந்து வந்த போது, கூடியிருந்த ரசிகர்கள் அஜித்தே கடவுளே என்று முழக்கமிட்டனர்... திரும்பும் திசையெல்லாம் அஜித்தே கடவுளே என்ற சத்தம் தான் ஒலித்தது கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை...ஆனால் இவையெல்லாம் வேண்டாம் என ரசிகர்களுக்கு அஜித் அன்பு கட்டளையிட்டிருந்த நிலையில், இப்போது அஜித் முன்னிலையிலேயே ரசிகர்கள் அஜித்தே கடவுளே என முழுவீச்சில் முழக்கமிட்டனர்... ஏற்கனவே காதுக்கு அருகே நரம்பு பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்திருந்த அஜித், ரசிகர்களின் அன்புத் தொல்லை தாங்க முடியாமல் காதுகளை மூடியபடி அங்கிருந்து கடந்து சென்றார்...

Tags:    

மேலும் செய்திகள்