தடைய மீறி புழக்கத்தில் பாலித்தீன் பைகள் அதிகாரிகள் விடுத்த அதிரடி எச்சரிக்கை

Update: 2024-01-11 03:04 GMT

புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரி தலைமையில் ரங்கபிள்ளை வீதியில் உள்ள கடைகளில் நகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 500 கிலோவுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், 2 கடைகளுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளனர்.

Action warning issued by the authorities for polythene bags in violation of the ban

Tags:    

மேலும் செய்திகள்