சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில், திருவிடந்தை அருகில், 233 ஏக்கர் நிலப்பரப்பில் ஆன்மிகம் மற்றும் கலாச்சார மையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்கு மீனவ மக்களிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்தும், அதைப் பற்றி கவலைப்படாமல் ஆன்மிக மையம் அமைக்க இந்து சமய
அறநிலையத் துறையும், சுற்றுலாத்துறையும் துடிப்பது
கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த இடத்தில் படகுகளை நிறுத்துவது, வலைகள் மற்றும் மீன்களை காய வைப்பதற்காக மீனவர்கள் பயன்படுத்தி வருவதாகவும், அங்கு ஆன்மிக மையம் அமைக்கப்பட்டால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.