9 வயது மாணவியிடம் செய்யக்கூடாததை செய்த ஹெட் மாஸ்டர்..போலீஸ் எடுத்த அதிரடி ஆக்சன் | Police
அய்யனேரி ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தாமோதரன், 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து விசாரித்த திருத்தணி காவல் துணை கண்காணிப்பாளர் கந்தன், புகாரில் முகாந்திரம் இருப்பதை கண்டறிந்தார். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரனை போலீசார் கைது செய்து போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். கடந்த சில தினங்களாக திருத்தணி கோட்டத்தில் அரசு பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்த சமூக ஆர்வலர்கள், இதை தடுக்க தகுந்த நடவடிக்கை தேவை என வலியுறுத்தியுள்ளனர்.