பரபரத்த தீயணைப்பு நிலையம்... ``உள்ளே..'' அலுவலர் சொன்ன வார்த்தை... அதிர்ந்த அதிகாரிகள்...

Update: 2024-11-26 11:05 GMT

கோவை கணபதி தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துச்செல்வன், தடையின்மை சான்றிதழ் வழங்க லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தொடர்ந்து புகார் சென்றது. இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் முத்துச்செல்வனிடம் இருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

அதற்கான போதிய ஆவணங்கள் அவரிடம் இல்லாத நிலையில் முத்துச்செல்வன் முன்னுக்கு பின் முரணாண தகவல்களை தெரிவித்துள்ளார். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சட்ட ஆலோசனைக்கு முத்துசெல்வன் மீது நடவடிக்கை எடுக்க தீயணைப்பு துறையினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்