பள்ளிக்கு கிளம்பும் நேரத்தில் பேய் முகம் கனமழை..!எதையும் பொருட்படுத்தாமல் நனைந்த படி சென்ற மாணவர்கள்

Update: 2024-11-26 11:12 GMT

கடலூரில் பள்ளி தொடங்கும் நேரத்தில் கனமழை பெய்ததால், பள்ளி மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை கடலூர் மாவட்டத்தில் சிகப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், காலையில் திடீரென பெய்த மழையால் பள்ளி செல்லும் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

தொடர்ந்து விட்டுவிட்டு கனமழை பெய்ததால், தாழ்வான சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

Tags:    

மேலும் செய்திகள்