சென்னையில் கனமழை காரணமாக ஓ.எம்.ஆர். சாலையில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையில் தொடர் மழையால், வேளச்சேரி, மடிப்பாக்கம், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. பெருங்குடி ஓஎம்ஆர் சாலையில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையில் தேங்கிய வெள்ள நீரால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக ஓ.எம்.ஆர் சாலை முழுவதும் மழைநீர் தேங்கி, நான்கு சக்கர வாகனங்கள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள், சாலையில் ஊர்ந்து செல்லும் சூழல் ஏற்பட்டது. இதனால் இப்பகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.