மகளிர் டி20: இங்கிலாந்திடம் தோற்ற இந்தியா

Update: 2022-09-16 02:55 GMT

இந்திய மகளிருக்கு எதிரான டி20 தொடரை இங்கிலாந்து மகளிர் அணி கைப்பற்றியுள்ளது. பிரிஸ்டால் நகரில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில், முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணி, 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து மகளிர் அணி, டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது.

Tags:    

மேலும் செய்திகள்