"மகளிர் உரிமைத் தொகை - தென்காசியில் ஆகஸ்ட் 5 முதல் 16 வரை".. "ரேஷன் கடை மூலமே விண்ணப்பிக்க முடியும்.." - இந்த ஆவணம் எல்லாம் கட்டாயம்..

Update: 2023-07-19 06:07 GMT

இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இரண்டு கட்டங்களாக விண்ணப்ப பதிவு முகாம்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மொத்தம் உள்ள 690 நியாய விலை கடைகளை இரண்டு கட்டமாக பிரித்து, முதல் கட்டத்தில் 347 நியாய விலை கடைகளுக்கு நாளை மறுநாள் முதல் ஜூலை 31ம் தேதி வரையும்,

இரண்டாம் கட்டத்தில் 343 நியாய விலை கடைகளுக்கு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 16ம் தேதி வரையும் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறுவதாகவும்,

நியாய விலை கடை பணியாளர், முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றை வீட்டில் நேரடியாக வழங்குவார் எனவும் தெரிவித்துள்ளார்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற முதல் கட்ட சிறப்பு முகாம் வருகிற 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரையும்,

இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 16ம் தேதி வரையும் நடைபெறும் என குறிப்பிட்டுள்ள அவர்,

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடம், நாள் மற்றும் நேரம் ஆகியன டோக்கன்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும்,

நியாய விலை கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பயனாளியின் வங்கி கணக்கு, மின்சார கட்டண ரசீது ஆகியவற்றை எடுத்து வர வேண்டுமெனவும்,

சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து தாலுகா அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்