திடீரென ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் பட்டாசு வெடித்து விரட்டிய ஊர்மக்கள் | Elephant
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஈச்சம்பள்ளம் கிராமத்தில், குட்டி யானையுடன் 3 காட்டு யானைகள் விவசாய நிலத்தில் புகுந்தது.
அங்கிருந்த நெல், தக்காளி உள்ளிட்ட பயிர்களை மிதித்து யானைகள் சேதப்படுத்திய நிலையில், மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த வனத்துறையினர், பட்டாசுகளை வெடித்து யானைக் கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டினர்.