தேசத்தின் பாதுகாப்புக்கு யார் பிரதமராக வேண்டும்? - மோடியா? ராகுலா?

Update: 2023-06-12 10:38 GMT
  • கடுமையான முடிவுகளை எடுக்க அரசு தயங்காது - பிரதமர் மோடி
  • பாகிஸ்தான், சீனா எல்லையில் உள்கட்டமைப்பு விஸ்தரிப்பு
  • "5 பில்லியன் டாலர் அளவுக்கு தளவாடம் ஏற்றுமதிக்கு இலக்கு"

தேச பாதுகாப்புக்காக கடுமையான, பெரிய முடிவுகளை எடுக்க அரசு தயங்காது என உறுதியாக சொல்கிறார் பிரதமர் மோடி... பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கம் என அதிரடி காட்டியவர், சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் வன்முறை குறைந்திருப்பதாக போலீஸ் தரவுகள் சொல்ல, காஷ்மீரில் ஜி-20 சுற்றலா கூட்டத்தையும் நடத்தி காட்டியிருக்கிறார்.பாகிஸ்தான், சீனா எல்லையில் உள்கட்டமைப்பு விஸ்தரிப்புடன், ரபேல் போர் விமானங்கள், எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பை கொள்முதல் செய்திருக்கிறார். தற்சார்பு இந்தியா திட்டத்தில் உள்நாட்டில் போர் கப்பல், விமானங்கள், ஏவுகணைகளை தயாரித்து இந்திய படைகளில் சேர்க்கவும், 5 பில்லியன் டாலர் அளவுக்கு தளவாடங்களை ஏற்றுமதி செய்யவும் இலக்கு நிர்ணயம் செய்துள்ளார்.பிஎப்ஐ அமைப்புக்கு தடை விதித்து அதிரடி காட்டியிருக்கிறார் பிரதமர் மோடி. ராணுவத்தில் அதிரடி மாற்றமாக அக்னிபாத் திட்டத்தை கொண்டுவந்த பிரதமர் மோடி, அக்னிபாத் இந்திய ராணுவத்தை வலுப்படுத்துவதில் கேம்-சேஞ்சராக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

  • காஷ்மீர் உள்நாட்டு விவகாரம் - பாகிஸ்தானுக்கு ராகுல் எதிர்ப்பு
  • "வெறுப்பு, வன்முறையை பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை"
  • "சீன விவகாரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்"

அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கும் ராகுல் காந்தி, அதை திரும்பப்பெற கோருகிறார். காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என கூறும் ராகுல் காந்தி, காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என பாகிஸ்தானுக்கு எதிர்ப்பையும் பதிவு செய்கிறார். தேச துரோக சட்டம் இனியும் தேவையா என்ற உச்சநீதிமன்ற கேள்வியை ஆதரிக்கிறார் ராகுல் காந்தி... பி.எப்.ஐ. விவகாரத்தில் வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்புவது தேசவிரோத செயல், அப்படிப்பட்டவர்களுக்கு எதிராக காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவிக்கிறார். உள்நாட்டில் பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்யும் திறனை விஸ்தரிப்போம் எனவும் கூறுகிறார். எல்லையில் சீனா இந்திய பகுதியை ஆக்கிரமித்துள்ளது எனக் கூறும் ராகுல் காந்தி, சீன விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் பாகிஸ்தானையும்- சீனாவையும் பிரித்துவைப்பதே வெற்றிக் கொள்கை எனவும் சொல்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்