இந்தியாவே கொந்தளித்த விவகாரம்.. "முகத்தில் சிறுநீர் கழித்தால் என்ன குற்றம்?" - சர்ச்சை கிளப்பிய பிராமண சங்க தலைவர்

Update: 2023-07-12 13:44 GMT

மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது பர்வேஷ் சுக்லா என்ற பாஜக பிரமுகர் சிறுநீர் கழித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சிறுநீர் கழித்த பர்வேஷ் சுக்லாவுக்கு ஆதரவு தெரிவித்தும் அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் பிராமண சமூகத்தின் சார்பில் சித்தி பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, முகத்தில் சிறுநீர் கழித்து முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொண்ட பர்வேஷ் சுக்லா என்ற பாஜக பிரமுகரை விடுதலை செய்யக்கோரி, பிராமண சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அகில இந்திய பிராமண சங்க தலைவர் குல்தீப் பரத்வாஜ், முகத்தில் சிறுநீர் கழித்ததில் என்ன குற்றம் உள்ளது என பேசினார். இவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்