"தடை விதித்து விட்டோம்.. விவசாய நிலங்களை கையகப்படுத்த மாட்டோம்.." - அமைச்சர் சொன்ன தகவல்

Update: 2023-03-27 14:59 GMT

கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலக்கரி திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய, விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன், கடலூரில் நிலம் தோண்டினால் மாவட்டம் முழுவதும் அழிந்து விடும் எனவும், என்.எல்.சி விரிவாக்கம் மாவட்டத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு வீராணம் மற்றும் பாளையங்கோட்டையில் நிலக்கரி திட்டம் மேற்கொள்ளப் பட்டதாகவும், பெரும் தாதுக்கள் நாட்டிலேயே எங்கு உள்ளது என்பது மத்திய அரசின் கொள்கை முடிவாக உள்ளதாகவும் கூறினார். மேலும், காவிரி டெல்டா பகுதி ஒரு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இந்த நிலத்தை துளைட்டு பரிசோதனை மேற்கொள்வது முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பணியை மேற்கொள்ள தடையும் விதிக்கப்பட்டுள்ளது என்றும், மற்றும் விவசாய நிலங்களை ஒருபோதும் கையகப்படுத்த மாட்டோம் எனவும் குறிப்பிட்டார்

Tags:    

மேலும் செய்திகள்