ஸ்டுடியோவாக மாறிய விஜயகுமாரின் 'குட்லக்' தியேட்டர் - சபாநாயகர் அப்பாவு, சூர்யா திறப்பு

Update: 2023-04-02 13:18 GMT

இயக்குநர் ஹரி குடும்பத்தாரின் குட்லக் ஸ்டுடியோவை சபாநாயகர் அப்பாவு, நடிகர் சூர்யா உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். நடிகர் விஜயகுமார் 40 வருடங்களாக குட்லக் என்ற பெயரில் தியேட்டர் நடத்தி வந்த நிலையில், இயக்குநர் ஹரி ப்ரீத்தா தம்பதி அதனை புதுப்பொலிவுடன் மாற்றி குட்லக் ஸ்டூடியோஸ் என்ற பெயரில் தொடங்கியுள்ளனர். சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, நடிகர் சூர்யா, அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்