பிபிசி பெண் செய்தியாளரை உக்ரைன் அதிபர் கட்டிப்பிடித்தது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய பிபிசி பெண் செய்தியாளர் ஒருவர், உக்ரைன் அதிபரை பார்த்து கட்டிப்பிடிக்க ஆசைப்படுவதாகவும், ஆனால் விட மறுக்கிறார்கள் என்றும் கூறினார். இதையடுத்து, வாருங்கள் என அழைத்த ஜெலன்ஸ்கி, செய்தியாளரை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அங்கு இருந்த இங்கிலாந்து பிரதமர் உட்பட அனைவரும் கைதட்டி வாழ்த்தினர்.