சுயநினைவின்றி உயிரிழந்த 4 வயது குழந்தை - திடுக் தகவலை சொல்லி கதறி அழும் குடும்பத்தினர்

Update: 2024-11-22 13:32 GMT

காஞ்சிபுரம், உப்பேரிகுளம் பகுதியில் கடந்த ஒரு வார காலமாகவே குடிநீர் கலங்கலாக வருவதாக புகார் எழுந்தது. இந்நிலையிலே அந்தப் பகுதியை சேர்ந்த மோனிகா என்ற 4 வயது குழந்தைக்கு நேற்று வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு ஏற்பட்டது. அங்குள்ள ஆரம்ப நிலையத்தில், செவிலியர்கள் கொடுத்த மாத்திரைகள் குழந்தை உட்கொண்டும், வாந்தி மற்றும் வயிற்று போக்கு தொடர்ந்தது. நள்ளிரவில் குழந்தை சுயநினைவின்றி இருந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையெடுத்து உடற்கூறு ஆய்வுக்காக அந்த மருத்துவமனையில் குழந்தையின் உடல் வைக்கப்பட்டுள்ளது.அப்பகுதி மக்கள் அதிகாரிகள் தங்கள் பகுதியில் நேரில் ஆய்வு நடத்தி குடிநீரை பரிசோதனைக்கு உட்படுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க கோருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்