`வழக்கறிஞர் கடத்தல் விவகாரம்' - மாஸ்டர் மைண்டை தூக்கி அதிரடி காட்டிய போலீஸ்
தேனி மாவட்டம்ம் போடிநாயக்கனூரில் நில விற்பனை தொடர்பான பிரச்சனையில், வழக்கறிஞர் சுரேஷ் என்பவர் நேற்று கடத்தப்பட்டார். இரண்டு மணி நேரத்தில் அவரை மீட்ட போலீசார், கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்யதனர். இந்நிலையில் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான சந்தனபாண்டியன் என்பவரை இன்று கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்கு செல்லும் வழியில், அட்டாக் பாண்டி மற்றும் சிவனேஸ்வரன் ஆகிய இருவரும் தப்பி ஓட முயன்ற நிலையில், வழுக்கி விழுந்து கை கால்களில் எழும்பு முறிவு ஏற்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நீதிமன்ற காவலில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.