அரசியல் சாசன முகப்புரையில் உள்ள சோசலிசம், மதச்சார்பின்மை ஆகிய சொல்லாடல்களை நீக்க கோரி, சுப்ரமணியன் சுவாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்த பொதுநல மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் நவம்பர் 25ஆம் தேதி கூறுகிறது. கடந்த விசாரணையின் போது, மனுதாரர்களின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், அரசியல் சாசனத்தின் அடிப்படை கூற்றின் ஒரு பகுதியாக மதசார்பின்மை இருந்து வந்துள்ளது என பல்வேறு தீர்ப்புகளில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளதை சுட்டிக் காட்டினர். பிரெஞ்சு மதச்சார்பின்மை வடிவவதத்தைப் போல இல்லாமல், நமக்கான புதிய மதச்சார்பின்மை வடிவதத்தை தேர்ந்தெடுத்தோம்