வங்கியில் ரூ.2000 நோட்டுகளை டெபாசிட் செய்ய முயற்சி - கைதான நக்சல் இயக்கத்தை சேர்ந்த இருவர்

Update: 2023-05-27 11:58 GMT

சத்தீஸ்கரில் உள்ள வங்கியில் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய முயன்ற நக்சல் இயக்கத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். சத்தீஸ்கரில், நக்சல் இயக்கத்தை சேர்ந்தவர்கள், தங்கள் கையிருப்பில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்ற நகர் பகுதிக்கு வரலாம் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், பிஜாப்பூர் பகுதியில் உள்ள வங்கியில், 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய முயன்ற, நக்சல் இயக்கத்தை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மூன்று பண்டல்களில், 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் பல்வேறு வங்கி கணக்கு புத்தகங்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்