காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30.12.2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30.12.2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-12-30 01:01 GMT
  • தூத்துக்குடியில் மினி டைடல் பூங்காவை திறந்து வைத்தார், முதல்வர் ஸ்டாலின்... புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை இன்று தொடங்கி வைக்கிறார்...
  • தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டப்பேரவை தொகுதிகளிலும், திமுக கூட்டணி வெற்றி பெற தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்... நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்...
  • கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில், இன்று பங்கேற்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்... உயர்ந்து நிற்கும் வள்ளுவர் போல் தமிழ்நாடு சிறக்கட்டும் என்று பெருமிதம்...
  • புயல் வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு உரிய நிதி வழங்காததால், தமிழக அரசுக்கு கடும் நிதிச்சுமை.... பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்காதது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்....
  • பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான கரும்புகள், மாவட்ட ஆட்சியர்களின் கண்காணிப்பிலேயே கொள்முதல் செய்யப்படும்... வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்...
  • அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவம் தொடர்பாக விசாரிக்க, தேசிய மகளிர் ஆணையம் அமைத்த உண்மை கண்டறியும் குழு சென்னை வருகை... அண்ணா பல்கலைக் கழகத்தில் இன்று விசாரணை...
  • பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதிகேட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில், அதிமுகவினர் போராட்டம்... யார் அந்த சார்? என குறிப்பிடப்பட்ட பதாகைகளுடன் நூதன முறையில் அரசுக்கு கண்டனம்...
  • மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான, அதிமுகவின் போராட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு... சாமானியர்கள் பாதிக்கப்படும் போது ஒருவர் மட்டுமே அந்த பிரச்சினையை முன்னிறுத்துவது அரசியலாகாது என்றும் கருத்து...
  • பொதுக்குழுவில் நடந்த மோதலுக்கு பின், பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்தார், அன்புமணி.... பாமக ஒரு ஜனநாயகக் கட்சி என்பதால், காரசார விவாதங்கள் இருப்பது சகஜம் என கருத்து...உட்கட்சிப் பிரச்சினையில் அடுத்தவர்கள் தலையிட வேண்டாம் எனவும் வேண்டுகோள்...
  • உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் பிரிவில், சாம்பியன் பட்டம் வென்றார், இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி..... வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை ஹம்பி வசப்படுத்தியுள்ளார் என்று பிரதமர் மோடி வாழ்த்து...
Tags:    

மேலும் செய்திகள்